சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கைகாட்டி வெள்ளார் வசந்தம்நகரில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வசந்தம்நகர் வசந்த விநாயகர் கோவிலில் மங்கள இசையுடன் பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு ராம பக்த ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், தீர்த்தக்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 108 திரவிய ஹோமம் நடக்கிறது. இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி காலை 6 மணிக்கு 10, 008 வடைமாலை அணிவித்து சிறப்பு அலங்காரம், அஷ்டோத்திர நாம அர்ச்சனை மகா தீபாராதனை நடைபெற்றது.காலை 8.30 மணிக்கு ராம பக்த ஆஞ்சநேயருக்கு லட்சார்சனை, அனுமன் சகஸ்ர நாமம் அர்ச்சனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு அனுமன்னுமன சக சகஸ்ரநாமம்,லட்சார்ச்சனை நிறைவு செய்து சிறப்பு ஆராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது, மாலை 5.30 மணிக்கு ராம பக்த ஆஞ்சநேயர் திருவீதி உலா நடைபெற்றது.காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது மாலை 6 மணிக்கு சின்னத்திரை நட்சத்திர பாடகர்கள் பங்குபெறும் மாபெரும் பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment