தாரமங்கலம் பத்ரகாளியம்மன் தேரோட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 January 2024

தாரமங்கலம் பத்ரகாளியம்மன் தேரோட்டம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு சம்பந்தப்பட்ட பத்ரகாளியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, புதன்கிழமை இரவு பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று நடைபெற்றது.மதியம் திருதேரில் எழுந்தருளிய பத்ரகாளி அம்மன் திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேர் பவனியில் தப்பாட்டம், செண்டைமேளம், மயிலாட்டம், காளை மாடு, ராஜா ராணி ஆட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் ஆட்டம், கரகாட்டம், சக்தி மாரியம்மன் அவதார வேடமணிந்து ஆடியபடி கலைஞர்கள் சென்றனர். நான்கு கோடி மகா ஜனங்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் பெரியாம்பட்டி, சிக்கம்பட்டி, பொத்தியாம்பட்டி, கருப்புபட்டி பகுதியைச் சேர்ந்த நாடார் சமூகத்தால் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக் கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனை வழிபட்டு தேரை வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் புனிதராஜ், தக்கார் திருஞானசம்பந்தம் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad