இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக வண்டி ஒட்டியதற்கான சம்பளம்ரூ.28 ஆயிரத்தை கொடுத்தால் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதாக சுந்தரத்திடம் கேட்டுள்ளார். அப்போது சுந்தரம் தனக்கு தரவேண்டிய சம்பளத்தை முழுமையாக கொடுக்காமல் ரூ. 1,000 மட்டும் கொடுத்து விட்டு மீதி பணம் பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதனால் டிரைவர் ரமேஷ் கடும் ஆத்திரமடைந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் பவளத்தானுரில் இருந்து லாரியை எடுத்துக்கொண்டு சென்று தாரமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார்.
மீண்டும் சுந்தரத்திற்கு செல்போன் போட்டு சம்பளம் வழங்கவில்லை என்றால் லாரியை கொளுத்தி விடுவேன் என்று கூறிவிட்டு லாரியின் டீசல் டேங்கை திறந்து பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சுந்தரம் வருவதற்குள் லாரி மளமளவென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் சேர்ந்து எரிந்து சேதம் அடைந்தது. உடனடியாக டிரைவர் ரமேஷை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment