சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் சுற்றுலாப் பயணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்கள் உள்பட ஏராளமானவர்கள், பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலெக்டர்அலுவலகம் முழுவதும் மலர்கள், வண்ண கோலங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
விழாவையொட்டி தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கினார். பச்சரிசி, திணை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்கள் மூலம் 5 மண் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலெக்டர் கார்மேகம்கார்மேகம் மற்றும் அலுவலர்கள், வெளிநாட்டுப் பயணிகள் சிலர் மாட்டு வண்டியில் ஏறி கலெக்டர் அலுவவலகத்தை சுற்றி வலம் வந்தனர்.சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் ராமச்சந்திரன், சதாசிவம் எம். எல். ஏ., கூடுதல் கலெக்டர் அலமேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment