சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள அமரகுந்தி சிவன் கோயில் மைதானத்தில் இன்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்குபெற்று மாசான முறையில் எருது விடும் விழா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதை கண்டு காலித்தனர்.
இதில் மாடுபிடி வீரர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.சிறப்பான முறையில் ஆடிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் உள்ளிட்ட பல்வேறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு முன் சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏதுவாக ஆம்புலன்ஸ் முன்னதாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment