சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சியில் சனிக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகளை விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று ஜனவரி 6-ம் தேதி கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு சுமார் 4,500 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 4500 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் 3500 ஆடுகள் விற்பனையானது. ஆடு ஒன்று சராசரியாக எடைக்கு தகுந்தார் போல் ரூபாய் 5000முதல் ரூபாய் 18000வரை விலை போனது. இன்று மட்டும் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 3500 ஆடுகள் ரூபாய் 4. 5 கோடிக்கு விற்பனையானதாக சேலம் மாவட்ட ஆட்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment