திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க கொங்கணாபுரம் கிளையில் வாரந்தோறும் பருத்தி ஏலம் விற்பனை நடைபெற்று வருகிறது. பருத்தி ஏலத்திற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பருத்தி கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று ஜனவரி 6ஆம் தேதி திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 2,300 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நடைபெற்ற ஏழத்தில் பிடி ரக பருத்தி ரூபாய் 6,069 முதல் 7,319 வரையும், கொட்டு ரகப் பருத்தி ரூ 3,169 முதல் ரூ 4,909 வரை விலை போனது. மொத்தம் 2,300 மூட்டை பருத்தி ரூபாய் 55 லட்சத்துக்கு ஏலம் போனதாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் கொங்கணாபுரம் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment