சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா முதல் சுந்தர் லாட்ஜ் வரை சாலையோரம் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை குமாரசாமிப்பட்டி பகுதி தி. மு. க. செயலாளரும், 14-வது வார்டு கவுன்சிலருமான சாந்தமூர்த்தி, ராஜேந்திரன் எம். எல். ஏ. மற்றும் மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து மேயர் மற்றும் எம். எல். ஏ. முயற்சியால் முதல்அமைச்சர் நிதியில் இருந்து சாக்கடை கால்வாய் அமைக்க ரூ. 3.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான பூமி பூஜை குமாரசாமிப்பட்டியில் இன்று காலை நடந்தது. இதில் ராஜேந்திரன் எம். எல். ஏ. மற்றும் மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி அதற்கான பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது வார்டு செயலாளர் செந்தில்குமார், வக்கீல் விஜயகுமார் மற்றும் சிவபாலன், தஸ்தகீர், மூசா உள்பட பலர் பங்கேற்றனர்..
No comments:
Post a Comment