தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியது:-விவசாய நிலங்களில் பொங்கல் விழா நடைபெறவில்லை அதற்கு மாறாக கல்வி நிலையங்களிலும், அரசு அலுவலகங்களில் இவ்விழா நடைபெறுகின்றன. 1967 ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தான் பொங்கல் தொகுப்பு, கைத்தறி வேட்டி, சேலை கொடுக்க ஆரம்பித்தனர். தேவையற்ற இலவசங்களை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஆட்சியில் அமர்வதற்கும், ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்கு அறிவித்து அதை நடைமுறை படுத்துவதும் வாக்களர்களின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடுக்கும் சாவால் ஆகும் எனவும் அரசு பணி முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
தற்போது அரசு பணி என்பது பயனாளிகளை கண்டறிவதும் அவர்களின் கையில் இலவச பொருள்களை திணிப்பதும் என்றாகி உள்ளது. நாடாளுமன்றம் தேவையற்ற இலவசங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க தவறினால் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவிற்கு ஏற்படும் எனவும் கள்ளை இறக்கி விற்பனை செய்ய தமிழகரசு அனுமதிக்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஜனவரி 21ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும் என்றார்.
No comments:
Post a Comment