திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 January 2024

திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்.


சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தில் வருகிற 21-ந் தேதி தி. மு. க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது. இதை முன்னிட்டு கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில மாநாடு திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார்.

திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல். ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி. மு. க. இளைஞரணி மாநில மாநாடு இந்தியாவே வியக்கும் வகையில் சிறப்பாக அமைய வேண்டும். இதற்கு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு உணவு அருந்தும் இடம், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கப்பட்டன.


கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ. ஏ. ஏ. ஆறுமுகம்,பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad