இளைஞரணி மாநாட்டுக்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 January 2024

இளைஞரணி மாநாட்டுக்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் மாநாடு நடைபெறும் இடத்தை தினமும் பார்வையிட்டு வருகின்றனர். தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் வருகிற 20-ந் தேதி மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார்சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வரும், போலீஸ் சூப்பிரண்டுமான லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 


முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தி. மு. க. மாநாட்டு பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தி. மு. க. செயலாளர்கள் எஸ். ஆர். சிவலிங்கம் (கிழக்கு), வக்கீல் ராஜேந்திரன் (மத்திய), டி. எம். செல்வகணபதி (மேற்கு), மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad