ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த கார். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 January 2024

ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த கார்.


சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த 3 பேர் காரில் நேற்று காலை ஏற்காட்டுக்கு சுற்றி பார்க்க சென்றனர். இந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டினார். பின்னர் அவர்கள் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். மலைப்பாதையில் 16-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 அடிஆழ பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் சீனிவாசன் உள்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்த கார் மீட்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad