சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொங்கல் விழா. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 January 2024

சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொங்கல் விழா.


தமிழர்கள் திருநாளாம் தைத்திருநாள் விழா தமிழகத்தில் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளில் விளைச்சல் கொடுத்த நிலத்திற்கும் உழுத கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் சேலம் மாநகர் காவல்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மைதானம் முழுவதும் வண்ண வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், என காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 


இந்த விழாவில் கலந்து கொண்ட பெண் காவலர்கள் பாரம்பரிய உடையான புடவை அணிந்தும், ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் வந்திருந்தனர். காவல் ஆணையாளர் விஜயகுமாரி புதுப் பானையில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி ஆயுதப்படை மைதானத்தில் வலம் வந்தார். காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad