மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது சந்தைதானம்பட்டி ஏரி. மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் இந்த ஏரி சேர்க்கவில்லை. இதையடுத்து இந்த ஏரியை மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் சேர்க்க கோரி சதாசிவம் எம். எல். ஏ., சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தினார். அதேபோன்று ஏரியை, மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் சேர்த்தால், கோனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்று முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலினுக்கு பல முறை கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தற்போது ரூ. 2 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இதையடுத்து சந்தைதானம்பட்டி ஏரியை, மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் இணைப்பதற்கான பூமி பூஜை நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கு சதாசிவம் எம். எல். ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைக்கிறார்..
No comments:
Post a Comment