மேட்டூர் அணையில் புனரமைப்பு திட்ட மதிப்பீடுகள் அதிகாரி ஆய்வு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 January 2024

மேட்டூர் அணையில் புனரமைப்பு திட்ட மதிப்பீடுகள் அதிகாரி ஆய்வு.


மேட்டூர் அணையில் வரும் நிதியாண்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடுகளை தயார் செய்வது குறித்து திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அணையின் வலதுகரை, இடதுகரை, மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, ஆய்வு சுரங்கம், 16 கண் பாலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 

இதனை தொடர்ந்து அணையில் மேற்கொள்ள வேண்டியபகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக மேட்டூருக்கு வந்த தலைமை பொறியாளர் சுப்பிரமணியத்தை மேட்டூர் நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணை பிரிவு உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad