கோவையிலிருந்து சேலம் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 31 December 2023

கோவையிலிருந்து சேலம் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு.


தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 4-வது வந்தே பாரத் ரயிலாக கோவையில் இருந்து பெங்களூருவுக்கு புதிய ரெயிலை அயோத்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோவையில் இருந்து சேலத்துக்கு வந்த வந்தே பாரத் சிறப்பு ரயிலுக்கு பா. ஜனதாகட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ரெயில் பிளாட்பாரத்துக்கு வந்ததும் அவர்கள் மலர்தூவி வரவேற்றதோடு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து சேலம் எஸ். ஆர். பார்த்திபன் எம். பி., பா. ஜனதா மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் ஆகியோர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.இந்த சிறப்பு ரயில் தினசரி சேவையாக இயக்கப்பட உள்ளது. பெங்களூருவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து பெங்களூருவுக்கும் இரு மார்க்கத்திலும் ரயில் செல்கிறது. 


கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு காலை 7. 12 மணிக்கு வந்துசேரும். பின்னர் காலை 7.15 மணிக்கு இங்கிருந்து புறப்படும். இந்த ரெயில் தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடையும்.. 

No comments:

Post a Comment

Post Top Ad