சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம் தலைமையில் நடைபெற்ற முகாமில் தேவூர் பேரூராட்சி செயலர் அலுவலர் வனிதா வரவேற்றார். முகாமில் இலவச வீட்டு மனை பட்டாமுதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
மேலும் சேலம் தெற்கு மாவட்ட பாமக துணை தலைவர் லட்சுமணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து தேவூரை மையமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டுமென மனு அளித்தனர். அப்போது தலைமையிடத்து துணைதுணை வட்டாட்சியர் தமிழ்செல்வி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, தேவூர் பேரூராட்சித்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்..
No comments:
Post a Comment