இளைஞரணி மாநாட்டு பணிகளை அமைச்சர் கே. என். நேரு பார்வையிட்டார். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 31 December 2023

இளைஞரணி மாநாட்டு பணிகளை அமைச்சர் கே. என். நேரு பார்வையிட்டார்.


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி. மு.க. இளைஞரணி சார்பில் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. 2 முறை தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மாநாட்டுக்காக பந்தல் அமைக்கும் பணி, வாகன நிறுத்தும் இடம், உணவு சாப்பிடும் இடம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு நேரில் பார்வையிட்டார். 

அப்போது கூடுதல் வழிப்பாதை உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ., சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம்.செல்வகணபதி, எஸ். ஆர். பார்த்திபன் எம். பி. ஆகியோர் உடன் இருந்தனர். கலந்து கொண்டவர்கள் மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், சின்னதுரை, செயற்குழு உறுப்பினர் மனோகரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. 

No comments:

Post a Comment

Post Top Ad