புத்தாண்டு கொண்டாட்டம்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 31 December 2023

புத்தாண்டு கொண்டாட்டம்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.


புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு கொண்டாட்டம் 2024-ம் ஆங்கில புத்தாண்டை விபத்து இல்லாத புத்தாண்டு தினமாக கொண்டாட சேலம் மாநகர போலீசார் சார்பில்விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குசாவடி, 5 ரோடு, 4 ரோடு, அண்ணா பூங்கா, அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம், சுந்தர் லாட்ஜ் ஆகிய சந்திப்புகள், ஏற்காடு ரோடு, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் வாகனங்களை அதிவேகமாகவும், குடிபோதையிலும் என சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டுதலங்கள், மக்கள் அதிகம் கூடம் இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


புத்தாண்டை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார், 150 ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் 20 வாகனங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் ரோந்து பணியில்ஈடுபடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad