தமிழ்நாட்டில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு கோரி உள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நங்கவள்ளி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். எடப்பாடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, சங்ககிரி ஒன்றிய செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், ஜலகண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன்.மாவட்ட குழு உறுப்பினர்கள் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment