பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேக்ளா குதிரை பந்தயம் நடந்தது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 January 2024

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேக்ளா குதிரை பந்தயம் நடந்தது.


ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, குதிரை ரேக்ளா பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறிய குதிரைகளுக்கான போட்டி, பெரிய குதிரைகளுக்கான போட்டி என்று இருபிரிவுகளில் பந்தயம் நேற்று நடத்தப்பட்டது.

ஆத்தூர் உடையார் பாளையம் பகுதியில் நடைபெற்ற ரேக்ளா குதிரை பந்தயத்தை சேலமகிழக்கு மாவட்ட தி. மு. க. பொருளாளர் ஆர். வி. ஸ்ரீராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.போட்டியில் சிறிய குதிரைகளுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ. 20 ஆயிரத்தை திருச்சி பச்சையம்மன் துணை குதிரையும், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரத்தை குளித்தலை எம். ஆர். நிமலன் குதிரையும், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தை திருச்சி உறையூர் விஜயா வினோத் குதிரையும், 4-ம் பரிசு ரூ. 5 ஆயிரத்தை ராசிபுரம் அஜித்குமார் குதிரையும் பெற்றது.


பெரிய குதிரைகளுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ. 25ஆயிரத்தை கோவை பண்ணாரி அம்மன் குரூப்ஸ் குதிரையும், 2-வது பரிசு ரூ. 20 ஆயிரத்தை சேலம் வீர காளியம்மன் குதிரையும், 3-ம் பரிசு ரூ. 15 ஆயிரத்தை கோவை பண்ணாரி அம்மன் குதிரையும் வென்றன.பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த இந்த ரேக்ளா பந்தயத்தை காண, ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும்4 சுற்றுவட்டார பகுதிகளை வியக்கும் அளவுக்கு ஏராளமான பொதுமக்கள் 4 திரண்டு வந்து கண்டு ரசித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad