சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, எடப்பாடி உள்ளிட்ட 11 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தையானது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிறப்பான திட்டத்தில் விவசாயிகளுக்கான இது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். உழவர் சந்தையில் தக்காளி மற்றும் ஆங்கில காய்கறி கடைகளிடம் சேலம் மாவட்ட வேளாண்மை உயர் அதிகாரி ஒருவர் அனைத்து சந்தைகளிலும் கமிஷன் கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அதிகாரியை மாற்ற கோரி சூரமங்கலம் உழவர் சந்தை முன்பு சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்படி இருந்தும் அந்த அதிகாரியை சேலம் மாவட்டத்திலே வைத்துக்கொண்டு உழவர்களிடம் கமிஷன் கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார். அப்படி கமிஷன் கொடுக்காதவர்களிடம் ஏதாவது ஒரு காரணம் காட்டி கடைகளை இடைநீக்கம் செய்து வருகிறார். மேலும், உழவர் சந்தையில் பணி செய்து வரும் நிர்வாக அலுவலர்களிடம் ஏதாவது ஒரு காரணம் காட்டி மிரட்டி வருகிறார் என்றும் உழவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நல்ல முறையில் இயங்கி வரும் உழவர் சந்தையினை நாசகதியாக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உழவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment