ஏரி நீரில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்; நோய் தொற்று பரவும் அபாயம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

ஏரி நீரில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்; நோய் தொற்று பரவும் அபாயம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?



சேலம் மாவட்டம் மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த உபரி நீர் சேலம் மாவட்டம்மானத்தால் வழியாக தொளசம்பட்டி ஏரிக்கு வந்து அடைந்தது.தொளசம்பட்டி ஏரி நிரம்பிய நிலையில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து ஏறியே கழிவுநீர் போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையை தொடர்ந்து நீடித்தால் தண்ணீரில் குளிக்கும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. இந்த தண்ணீர்ரானது அடுத்து பெரியாரிப்பட்டி போன்ற ஏரிகளுக்கு செல்கின்ற பொழுது அங்கேயும் கழிவு நீருடனும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் தான் செல்லும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஏரியில் குளிக்க செல்கின்ற பொழுது நோய் தொற்று ஏற்படக்கூடும், தண்ணீரை குடிக்கும் உயிரினங்கள் ஆடு மாடுகள் போன்றவற்றிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை கூட ஏற்படக்கூடும்.உடனடியாக கழிவு நீரையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..        -


தமிழக குரல் சேலம் செய்தியாளர் 

S. வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad