சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் தர்ணா போராட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 26 September 2024

சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் தர்ணா போராட்டம்.


சேலம் அஸ்தம்பட்டி தாசில்தார் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு 5 பொறியாளர் மற்றும் - கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன இந்த அலுவலகத்தில்  ஒப்பந்ததாரர்கள், மற்றும் தொழிலாளர்கள், வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 


அப்போது ஒப்பததாரர்கள் கூறுகையில் நாங்கள் - கடந்த 20 ஆண்டுகளாக - ஒப்பந்த பணி செய்து வருகிறோம் தற்போது தலைவாசல் அருகே உள்ள வரவூர் சிறுவாச்சூர் பகுதியில் 7 கிலோமீட்டர் தூரம் சாலை அமைப்பதற்கு 7 கோடியில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் தேதி நேற்று முடிவடைந்தது. அதற்காக நாங்கள் விண்ணப்பித்த நிலையில்

தரச் சான்று கேட்டு நாங்கள் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தோம் ஆனால் அதிகாரிகள் இதுவரை தரச் சான்று தர மறுக்கின்றனர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தரச் சான்று வழங்குகின்றனர் தரச் சான்று கொடுக்காவிட்டால் ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது 


இதனால் தரச்சான்று தராததை கண்டித்து இந்த போராட்டத்தி ல்

ஈடுபட்டுள்ளோம். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து அஸ்தம்பட்டி போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே அவர்கள் பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளே வருவதை அறிந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெயின் கேட்டை இழுத்து பூட்டியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

Post Top Ad