29.11.2024 அன்று தொடங்கி இன்று 09.122024 நிறைவடைந்த சேலம் புத்தகத் திருவிழாவில் மொத்தம் ரூ.120 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.
சேலம் புத்தகத் திருவிழாவின் 11 நாள்களில் 1,30,282 நபர்கள் வருகைபுரிந்து பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்களால் சேலம். மாநகராட்சித் திடலில் 29.11.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்ட சேலம் புத்தகத் திருவிழாவானது இன்று 09:12.2024, திங்கள்கிழமை வரை தொடர்ந்து 11 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் நாள்தோறும் கருத்தரங்குகள் பயிலரங்குகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் கருத்துரைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக வாசிப்பாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன் பெறும் வகையில் நடைபெற்றது.
சேலம் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று (09122024) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இராயிருந்தாதேவி. இ.ஆ.ப. மாநகர காவல் ஆணையர் திரு.பிரவின் குமார் அபிநபு, இ.கா.ப. மாநகராட்சி ஆணையாளர் திருரஞ்ஜீத் சிங். இ.ஆ.ப. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.லலித்ஆதித்ய நிலம், இ.ஆ.ப. உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி ஆக்ரிதி சேத்தி. இ.ஆ.ப. நிருவாக இயக்குநர் (பொ) திரு.வி.கே.பாண்டே உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் புத்தக திருவிழாவில் பங்கேற்ற வாசகர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர் திரு.ஜீவானந்தம் அவர்கள் "வண்ணம் பேசும் மொழி" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்கள். நிறைவு நாளான இன்றைய தினம் சேலம் புத்தகத் திருவிழாவின் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இராபிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்கள்.29:11.2024 அன்று தொடங்கி இன்று 09:122024 வரை 11 நாள்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழாவில் மொத்தம் গ.1.20 கோடிக்கு 1,06,046 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோன்று பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 130.282 நபர்கள் வருகைபுரிந்து பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர்..
No comments:
Post a Comment