தொளசம்பட்டி சந்தை பஸ் நிறுத்தத்திற்கு 98 மற்றும் 70 ஆகிய அரசு பேருந்துகள் வராததால் மக்கள் அவதி - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 December 2024

தொளசம்பட்டி சந்தை பஸ் நிறுத்தத்திற்கு 98 மற்றும் 70 ஆகிய அரசு பேருந்துகள் வராததால் மக்கள் அவதி



சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் இரண்டு ஆண்டு காலமாக அரசு பேருந்து ஆகிய 70,98  பேருந்துகள் சந்தை பஸ் நிறுத்தத்திற்கு வருவதில்லை.சேலம் இருந்து தொளசம்பட்டிக்கு தினமும்  நான்கு முறை வந்து சொல்லும் பல ஆண்டு காலமாக இந்த இரண்டு அரசு பேருந்தும் தொளசம்பட்டி சந்தை பேருந்து நிறுத்தம் இடத்திற்கு வந்து திரும்பிச் செல்வது வழக்கம் இங்கு அதிகமாக கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகள் அலுவலகத்திற்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் தொழில் முனைவோர் இவ்வாறு பலதரப்பட்ட மக்கள் சந்தை பஸ் நிறுத்தத்தில் ஏறுவார்கள் இறங்குவார்கள் ஆனால் இரண்டு ஆண்டு காலமாக மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு அரசு பேருந்தும் சேலத்தில் இருந்து வந்து தொளசம்பட்டி காந்தி சிலை அருகிலேயே நின்று விட்டு திரும்பி செல்கிறது இதனால் மக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தொழில் முனைவோர் அரசு பணியில் உள்ள மக்கள் சந்தை பஸ் நிறுத்தத்தில் பஸ் வராத காரணத்தினால் மிகவும் சிரமப்படுகின்றனர் இதற்கு உடனடியாக போக்குவரத்துக் கழகம் முயற்சி எடுத்து இந்த இரண்டு அரசு பேருந்துகளையும் தொளசம்பட்டி சந்தை பஸ் நிறுத்தத்திற்கு வர வைக்க வேண்டும் என்பது தொளசம்பட்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது..

No comments:

Post a Comment

Post Top Ad