40 ஆண்டுகாலம் மண் சாலையினை பயன்படுத்தி வந்த சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.243 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அரசிராமணி பகுதியில் பேரூராட்சிகள் துறையின் வாயிலாக ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப, அவர்கள் ஆய்வு செய்து தகவல்.
சேலம் மாவட்டம், அரசிராமணி பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சிகள் துறையின் கீழ் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (11122024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும். உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்றைய தினம் அரசிராமணி பேரூராட்சியில் 15-வது நிதி ஆணைத்தின் சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வெள்ளூற்று பெருமாள் கோவில் முதல் எல்லப்பாளையம் வரை மற்றும் சேலத்தாண்காடு முதல் எல்லப்பாளையம் வெள்ளூற்று பெருமாள் கோவில் வரை 40 ஆண்டுகாலம் மண் சாலையாக பயன்படுத்தி வந்த பொதுமக்களுக்கு நபார்டு சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 3.43 கிமீ தூரத்திற்கு ரூ.241 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசிராமணி பேரூராட்சியில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் அரசிராமணி பேரூராட்சி 8வது வார்டு அருகே ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் என அரசிராமணி பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் ரூ.5.33கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் திருகுமார். பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்..
No comments:
Post a Comment