உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமின் இரண்டாம் நாள் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து சங்ககிரியில் முகாமிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆப., அவர்கள் கள ஆய்வு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 December 2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமின் இரண்டாம் நாள் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து சங்ககிரியில் முகாமிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆப., அவர்கள் கள ஆய்வு.


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமின் இரண்டாம் நாள் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து சங்ககிரியில் முகாமிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆப., அவர்கள் கள ஆய்வு.


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமில் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் இரண்டாம் நாளாக (19.12.2024) கள ஆய்வு மேற்கொண்டார். கள ஆய்வுக்குப் பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் 18.12.2024 மற்றும் 19.12 2024 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றைய தினம் 19.12.2024 காலை சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகள் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி குறித்தும். சங்ககிரி மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மைப்பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.


மேலும், பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும், குடிநீரில் முறையான அளவுகளில் குளோரினேற்றம் செய்து வழங்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம், சங்ககிரியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவுத் தூண் அமைவிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


முன்னதாக, (18.12.2024) சங்ககிரியில் உள்ள அரசு மாணவ, மாணவியர் விடுதிகளை ஆய்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து, சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும், குறித்த நேரத்தில் மாணவிகளுக்கு உணவுகள் பரிமாறப்படுவது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும் கேட்டறியப்பட்டது.


மேலும், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், 18.12.2024 மற்றும் 19.12.2024 ஆகிய இரண்டு நாள்கள் சங்ககிரி வட்டத்தில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கள ஆய்வு குறித்த அறிக்கையினை இன்றையதினம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்களின்மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட டாக்டர்.இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். ஆட்சித்தலைவர்


இந்த ஆய்வின்போது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ந.லோகநாயகி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad