மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு திமுக சார்பா நிதி உதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திரன் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 December 2024

மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு திமுக சார்பா நிதி உதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திரன்



மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று மாலை நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றி வந்த இரண்டு தொழிலாளர்கள் நிலக்கரி குவியலில் சிக்கி உயிர் இழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேட்டூர் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீகாந்த், சீனிவாசன் , முருகன் மற்றும் கௌதம் ஆகிய நான்கு பேரிடமும் ராஜேந்திரன் நலம் விசாரித்தனர்


மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அளித்துவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து.  தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் உத்தரவுபடி அவர்களின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்கினார் அமைச்சர் ராஜேந்திரன்


தொடர்ந்து உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.


 முதலமைச்சர் உத்தரவின் படி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினோம்.


இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த , மேட்டூர் அனல் மின் நிலைய பகுதிக்கு சென்று பார்வையிட்டர் அமைச்சர் , விபத்து நடந்தது குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad