சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வட மாநிலத்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 December 2024

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வட மாநிலத்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காரைக்காடு சோதனைச் சாவடியில்  மதுவிலக்கு போலீசார் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது மதுபோதையில் இருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த வட மாநிலத்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.தாக்குதலில் சுகனேஸ்வரன், செந்தில்குமார் ஆகிய இரண்டு காவலர்கள்  காயம் அடைந்தனர் பிறகு போலீசாருக்கு ஆதரவாக கிராம மக்கள் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தினர்.கிராமமக்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை தாக்கினர். இந்த தகவல் அறிந்த கொளத்தூர் காவலர்கள் விரைந்து வந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மேட்டூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அவர்கள் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad