சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து எடப்பாடி நகர அதிமுக சார்பாக மற்றும் ஒன்றியத்தின் சார்பாக எடப்பாடி நகர கழக செயலாளர் முருகன் தலைமையிலும், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், எடப்பாடி முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன், எடப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் எடப்பாடி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 200அதிமுகவினரை எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
- சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment