முன்னதாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்து கிடங்கினை ஆய்வு செய்த ஆய்வு குழுவினர், அங்கு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? எனவும் அவை உரிய முறையில் பராமரிக்கப்படுகின்றனவா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைளை ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 2 .35 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாரக்காடு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வுக்குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், மேலும் நியாய விலை கடை இருப்பு பதிவேடு மற்றும் வழங்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கோரணம் பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள நீர் உந்து நிலையத்தில் நடைபெற்று வரும், குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சங்ககிரி கோட்டாட்சியர் சௌமியா, செயற்பொறியாளர் மகாவிஷ்ணு, வட்டாட்சியர் லெனின் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆய்வின் போது ஆய்வுக்குழுவை சந்தித்த எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சி.டி ஸ்கேன் வசதி செய்து தருமாறும், இதற்காக இப்பகுதியில் இருந்து நோயாளிகள் சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து ஈரோடு மற்றும் சேலம் பகுதிக்கு சென்று வரும் அவல நிலையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவை ஆய்வு குழுவிடம் வழங்கினார்.
- சேலம் மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment