அன்னை காவேரி நதிநீர் பாதுகாப்பு குழு மற்றும் அகில இந்திய சந்நியாசிகள் சங்கம் இணைந்து, கர்நாடக மாநிலம், குடகு பகுதியில் உள்ள தலைகாவிரியில் தொடங்கி, தமிழகத்தில் உள்ள பூம்புகார் வரை காவிரி கரையோர பகுதிகளில் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 12-ம் ஆண்டாக நடைபெறும் இப் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதிக்கு வந்திருந்த விழிப்புணர்வு குழுவினர். கைலாசநாதர் ஆலயம் எதிரே உள்ள காவிரித்தாய் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து, காவிரி ஆற்றில் மஞ்சள், குங்குமத்துடன் மலர்களை தூவி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து குழுவில் இடம் பெற்றிருந்த சாதுக்கள் பொதுமக்களிடம் காவிரி நதி நீர் மாசுபடாமல் தடுத்துவிட வேண்டும் எனவும், நீர்நிலைகள் மாசுபட்டால் அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் பேரிடர் கால அபாயங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். தொடர்ந்து இக்குழுவினர் சேலம், நாமக்கல், திருச்சி வழியாக காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார் பகுதியில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment