
விவாதத்தின் போது பேசிய அதிமுக நகர மன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஏ.எம் முருகன். எடப்பாடி நகராட்சி பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள 3 சுகாதார வளாகங்கள், பணிகள் முடிந்து நீண்ட நாள் ஆகிய பின்னும், மின் இணைப்பு பெறாத நிலையில் அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் சிதிலமடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட சுகாதார வளாகங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி ஆணையாளர் சசிகலா: சமந்தா பட்ட சுகாதார வளாகங்களுக்கு மாற்றுத் துறையினரிடம் இருந்து பல்வேறு தடையின்மை சான்றுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவை உடனடியாக கிடைப்பதில் சில சட்ட சிக்கல்கள் இருந்து வரும் நிலையில், விரைவில் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார்.
அதிமுக நகர மன்ற உறுப்பினர் கேபிள் நாராயணன் பேசுகையில்: தனது வார்டுக்கு உட்பட்ட (26வது வார்டு) குடியிருப்பு பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் தெருவிளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்டவை சரியாக நடைபெறவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள போடவில்லை என கூறினார்:
இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர், நகர வார்டு பகுதிகளில் தென்படும் குறைகளை நகர மன்ற உறுப்பினர்கள் உடனடியாக தனது நேரடி கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அது குறித்து தான் விரைவில் தீர்வு காண முயற்சிப்பதாகவும் அதேசமயம் நகரமன்ற பகுதிகளில் உள்ள தெருவிளக்கு பராமரிப்பு குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் சீராக நடைபெற, சம்பந்தப்பட்ட நகர மன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து எடப்பாடி நகராட்சி பகுதியில் அதிகப்படியாக தெரு நாய்கள் தொல்லைகள் இருப்பதாகவும், நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், கவுண்டம்பட்டி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கிய அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படாமல், குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இப்ப பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள் தனம், மல்லிகா, கே.பி சுந்தராம்பாள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதங்களுக்கு இடையே 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சரவணன், வருவாய் அலுவலர் குமரகுருபரன்,சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி செய்தியாளர் லிங்கானந்த்.
No comments:
Post a Comment