எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா அங்கு திரண்டிருந்த மாணவிகள் மத்தியில் பேசுகையில்: மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்தும், மாணவிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக தீமைகளிலிருந்து மாணவிகள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் எனவும் விளக்கி கூறினார்.
மேலும் 1098 உள்ளிட்ட எண்களை பயன்படுத்தி காவல் உதவி மையங்களை தொடர்பு கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விலகி கூறினார். தொடர்ந்து விளையாட்டு, யோகா, பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட மனம் மற்றும் உடல் நலம் சார்ந்த செயல்பாடுகளில் மாணவிகள் தனி கவனம் செலுத்தி தங்கள் தகுதியும் திறமையும் வளர்த்துக் கொள்ள முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ன கூறி மாணவர்களுக்கான பல்வேறு தனிப்பட்ட பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதா, தலைமை காவலர் கவிதா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி செய்தியாளர் : லிங்கானந்த்.
No comments:
Post a Comment