காதல் திருமணம் செய்த பெண் மூன்றாண்டுகளாக தாய் தந்தை பார்க்க வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 January 2023

காதல் திருமணம் செய்த பெண் மூன்றாண்டுகளாக தாய் தந்தை பார்க்க வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் மூன்றாண்டுகளாக தாய் தந்தை பார்க்க வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில் அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.


இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தாய் தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் கூட தாய் தந்தையனார் வந்து பார்க்காததா தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார் இந்த நிலையில் அருண் வேலைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த நிலையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தொடர்ந்து அழுத நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது குழந்தை தொட்டிலிலும் கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் எடுத்து வீட்டுக்கு வந்த அருள் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையிலும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை எடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பூலாம்பட்டி போலீச பிரேதத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் இதனை தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌசல்யாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய் தந்தை பார்க்காத விரக்தியின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- செய்தியாளர் எடப்பாடி : லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad