எடப்பாடியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணமானது 150 நாட்களுக்கு பிறகு இறுதி நாளான இன்று காங்கிரஸ் கட்சியினர் கண் பரிசோதனை முகாம் நடத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவர் ராதா நாகராஜ் தலைமையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் நிறைவு நாளான எடப்பாடி பேருந்து நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதன் பிறகு நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை எடப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா தொடங்கி வைத்தார்.

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர் இதில் 60 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்து அவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுப்பி வைத்துள்ளனர்.
- செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.
No comments:
Post a Comment