தேசிய அளவில் சிலம்பத்தில் சாதனை படைக்கும் கூலி தொழிலாளி மகள். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 February 2023

தேசிய அளவில் சிலம்பத்தில் சாதனை படைக்கும் கூலி தொழிலாளி மகள்.


தினம்தோறும் கூலி வேலைக்குச் செல்லும் ஆறுமுகத்தின் மகள் ரமணி தேசிய அளவில் சாதனை படைத்தது சிலம்பப் பிரியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த நெசவுத் தொழிலாளியின் மகள் ரமணி சர்வதேச அளவில் சாதனை படைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தறி தொழிலாளி ஆறுமுகம் - சுதா தம்பதியினர் இவர்களது இளைய மகள் ரமணி எடப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார் இவர் சிலம்பம் போட்டியில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் அந்த மாநில நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் கோப்பையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள ரமணி தனது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று தன்னையும் தன்னுடன் பிறந்த நான்கு பேரையும் வாடகை வீட்டில் வசித்தபடி மிகுந்த சிரமப்பட்டு  எங்களை படிக்க வைக்கும் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாணவி ரமணி வாங்கிய தங்கப்பதக்கமும் கோப்பையும் பெற்றோர்களிடம் வழங்கி ஆசி பெற்றார். 


மேலும் இதுகுறித்து ரமணி கூறுகையில் எதிர்வரும் காலங்களில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியிலும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு மேலும் பல்வேறு சாதனைகள் புரிய தனது பெற்றோரிடம் வசதி இல்லாத காரணத்தினால் அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் ஏதேனும் உதவி செய்தால் தமிழகத்திற்கும் தனது கிராமத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் பல சாதனைகள் புரிய வாய்ப்பாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ள ரமணி  எதிர்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்களை மீட்கவும் தனது கல்வி மேம்படவும் பள்ளி சென்று வர நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் கால்நடைகள் மேய்ப்பதும் வீட்டு வேலைகளை செய்தும் பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருக்கும் ரமணிக்கு எண்ணங்கள் நிறைவேற அரசும் தன்னார்வலர்களும் முன் வர வேண்டும் என்பது அவரின் கோரிக்கையாக உள்ளது.


- சேலம் மாவட்ட செய்தியாளர் லிங்கனந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad