அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்வதை தொடர்ந்து எடப்பாடி பகுதியில் உள்ள ஆலயங்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜை.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேப்பமனு தாக்கல் செய்வதை தொடர்ந்து சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களான பிரசன்னம் நஞ்சுண்டேஸ்வரர், வரதராஜ பெருமாள் மற்றும் முருக பெருமான் ஆலயங்களில் அதிமுகவினர் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜையானதுஎடப்பாடி நகர செயலாளர் முருகன் மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி செய்தியாளர் லிங்கானந்த்.
No comments:
Post a Comment