மேட்டூரில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியதால் குடிநீர் வினியோகம் பாதிப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 March 2023

மேட்டூரில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியதால் குடிநீர் வினியோகம் பாதிப்பு.


மேட்டூர் தொட்டில் பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் மூலம் தினசரி  28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் காடையாம்பட்டி ,ஓமலூர், தொப்பூர் மற்றும் வழியிடை கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் உள்ள காடையாம்பட்டி ராட்சத  குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளியேறியது. இதனால் சாலை முழுவதும் வெள்ளைக்காடாய் காட்சியளித்தது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் கனராக வாகனங்கள் சாலையில் ஊர்ந்தபடியே சென்றது. 



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின் மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினார். குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது . இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காடையாம்பட்டி குடிநீர் குழாய் பழுதடைந்து காணப்படுவதால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேறுவது தொடர்கதையாக வருகிறது. 


எனவே பழுதடைந்த குழாயை மாற்றி விட்டு புதிதாக ராட்சத குழாய் அமைக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


- எடப்பாடி செய்தியாளர் : லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad