எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிக்குட்டைய மேடு பகுதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி அன்று நள்ளிரவு நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்து லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கணினி உபகரணங்களை கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப்பிடித்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த அழகப்பம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் (22) மற்றும் அவர் எனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (23) என்பதும், அவர்கள் தங்களது நண்பரான குணசேகரன் என்கின்ற ராஜ்மோகனுடன் சேர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள செல்போன் கடையில் நள்ளிரவு நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று, அவற்றை சேலத்தில் உள்ள ஒரு செல்போன் கடை மற்றும் கரிக்காபட்டி பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் மையம் ஆகியவற்றில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பகல் நேரத்தில் சரக்கு வாகனங்களில் டிரைவர்களாக வேலை பார்த்து வரும் இவர்கள், இரவு நேரத்தில் ஒன்றாக சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்கள் கொள்ளை அடித்துச் சென்ற விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் 10-ம் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செல் போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ்மோகனை திவிரமாக தேடி வருகின்றனர். மேலும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியின் வெளியாகி உள்ளது.
- எடப்பாடி செய்தியாளர் : லிங்கானந்த்.
No comments:
Post a Comment