சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எடப்பாடி அடுத்த தாவாந்தெரு பகுதியில் இன்று 12 வது வாரமாக தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது.

சுமார் 200க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி மற்றும் வடை வழங்கப்பட்டது. விழாவானது ஆலச்சம்பாளையம் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது. வாரம் தோறும் தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் காலை உணவு வழங்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி செய்தியாளர் : லிங்கானந்த்.
No comments:
Post a Comment