எடப்பாடி அடுத்து இருப்பாளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 March 2023

எடப்பாடி அடுத்து இருப்பாளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பு.


தமிழக முழுவதும் இன்று மார்ச் 22 ஆம் தேதி கிராம சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்தது அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்றது எடப்பாடி அடுத்து இருப்பாளி ஊராட்சியில் வேப்பமரத்துர் அருகே இன்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பல்வேறு பொருள் குறித்து பேசினார் தொடர்ந்து வேளாண்மை துறை கால்நடை பராமரிப்புத்துறை சுகாதாரத்துறை ஊட்டச்சத்து துறை போன்ற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அவரவர் துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு செயல் திட்டங்கள் குறித்து பேசினார்கள்.


தொடர்ந்து கிராம சபா கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அக்கறைப்பட்டியைச் சேர்ந்த ரத்தினா என்ற பெண் எழுந்து ஜல்ஜீவன் திட்டத்தில் இருப்பாளி ஊராட்சியில் போடப்பட்டுள்ள போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை கேள்வி எழுப்பினார் கேள்விக்கு பதில் அளித்த தலைவர் எத்தனை இணைப்புகள் என்பது எங்கள் ஊராட்சிக்கு தெரியாது மாவட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் என பதில் கூறினார் மேலும் அப்பெண் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் மக்களுடைய கோரிக்கைகளை தீர்மானமாக பதிவேற்றப்படுவதில்லை மக்களின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கிராம சபா கூட்டம் நடத்திக் கொண்டிருந்த தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் சொல்லக்கூடிய பொருள்கள் குறித்து மட்டுமே தீர்மானம் நிறைவேற்றுவோம் நீங்கள் சொல்வதை எல்லாம் தீர்மானமாக நிறைவேற்ற முடியாது எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பெண் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கிராமச் செயலாளர் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துக் கொண்டனர். கூட்டத்தை அவசர அவசரமாக முடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad