சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான வானவெடி தயாரிக்கும் குடோனில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் அமுதா என்ற பெண் உடல் சிதறி சம்பவ இடத்தில் உயிரிழந்தார் மேலும் இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெடப்பன் என்பவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கு குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் குமாரை கொங்கணாபுரம் போலீசார் கைது செய்தனர். விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் குமாரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த நிலையில் போலீசார் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment