எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்து தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சான்றிதழ்ழை எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கினர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

இதனை எடுத்து எடப்பாடி பேருந்து நிலையம் முன்பாக அதிமுக நகர மன்ற எதிர்க்கட் தலைவர் முருகன் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் அப்போது பட்டாசு வெடிக்க தொண்டர்கள் உற்சாகமிகு சாலையில் வெடிக்கும் முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்தனர் காவல்துறையினர் தடுப்பையும் மீறி தொண்டர்கள் உற்சாக கொண்டாடினர், இதில் எடப்பாடி நகர அம்மா பேரவை செயலாளர் கதிரேசன், அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்ட செய்தியாளர் லிங்கானந்த்.
No comments:
Post a Comment