பெண்களை அடித்து அரை நிர்வாணமாகிய கறிக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 29 March 2023

பெண்களை அடித்து அரை நிர்வாணமாகிய கறிக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


எடப்பாடி அருகே தலித் பெண்களை அடித்து அரை நிர்வாணமாகிய கறிக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் மாவட்டம் எடப்பாடி எடுத்த ஆடையூர் கிராமம் வண்ணாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கறிக்கடை உரிமையாளர் மாதையன் இவருக்கும் அதே பகுதியில் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்த இரண்டு தலித் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு அவர்களை அரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளார் இது குறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்யவே முற்படுவதாகவும் வேதம் என்ற பெயரில் தலித் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஜாதிய வன்மத்தோடு தலித் பெண்களை தாக்கி அரை நிர்வாணமாக்கிய நபரை உடனே கைது செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


- சேலம் மாவட்ட செய்தியாளர் லிங்கானந்த்.


No comments:

Post a Comment

Post Top Ad