சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வட்டார அங்கன்வாடி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோஷங்களை எழுப்பியும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு GPF பணம் வழங்கிட வேண்டும், மகப்பேறு விடுப்பு 1 வருடம் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியருக்கு வழங்க வேண்டும், பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு GPF லோன் வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தலைவி ஜெயசித்ரா தலைமையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment