சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வளையசெட்டிபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலுக்கு லிட்டர் 7 ரூபாய் உயர்த்தி வழங்க கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டமானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் மணி தலைமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் செயலாளர் ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்ட செய்தியாளர் லிங்கானந்த்.
No comments:
Post a Comment