எடப்பாடி அருகே இருசக்கர வாகன மோதி நேருக்கு நேர் விபத்து ஒருவர் பலி மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 30 March 2023

எடப்பாடி அருகே இருசக்கர வாகன மோதி நேருக்கு நேர் விபத்து ஒருவர் பலி மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.


சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஒருவர் பலி. எடப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த யுதராசாமி மகன் பிரகாஷ் வேட்டுப்பட்டியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மேலும் எடப்பாடியில் இருந்து சிலுவம்பாளையம் செல்லும் போது தம்பா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தர சாமி மற்றும் அவரது மகன் கவின் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் வேட்டுவபட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் தம்பா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்திரசாமி மற்றும் அவரது மகன் கவின் பலத்த காயங்களுடன் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரகாஷின் உடலை எடப்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- சேலம் மாவட்ட செய்தியாளர் லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad