மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட பரணிமணி எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 30 வார்டு பகுதிகளில் இருந்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நகர பகுதியில் 10-ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு முயற்சியுடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் திரளான தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வடிவேலு நன்றி கூறினார்.
- எடப்பாடி செய்தியாளர் : லிங்கானந்த்.
No comments:
Post a Comment